வழிகாட்டல் மற்றும் உளவியல் பட்டதாரிகள் தமக்கான வேலைப்வாய்ப்பினை வழங்க கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

உளநல பட்டப்படிப்பனை முடித்துள்ள ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்காது, வேறுபாட ஆசிரியார்களுக்கு நேர்முகதேர்வு நடத்துவதற்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த கடிதங்களை பார்வையிட்ட அத்துறைசார்ந்த பட்டதாரிகள், தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்க வேண்டாம் என கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

அந்த போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்போது மாணவர்கள் மத்தியில் மன அழுத்தங்கள், மனப்புரழ்வுகள், தற்கொலைகள் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை சாதாரண தரம் மற்றும் உயர்தரம் படித்தவர்களினால் தீர்த்து வைக்க முடியுமான என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். உரிய முறையில் கல்வி கற்று பல ஆராய்ச்சிகளை முன்னெடுத்து அனுபவங்களைப் பெற்றுக்கொண்டவர்களினால் மாத்திரமே அதற்கான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்க முடியும்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்காவிடின், எதிர்வரும் காலங்களில் எமது மாணவ சமூதாயத்தினை சிறந்த சமுதாயமாக கட்டி எழுப்புவது மிகவும் கடினமான ஒரு விடயம்.

தகுதியுடையவர்களுக்கு பொருத்தமான நியமனங்களை வழங்குங்கள், வடமாகாண கல்வி அமைச்சின் செயற்பாடுகள், தவறான வழிகாட்டலின் கீழ் மாணவர்களை அழிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

நாளை (02) வடமாகாண கல்வி அமைச்சில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளமையினால், காலை நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ள இடத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேர்முகத் தேர்வின்போது முன்னெடுக்கவுள்ள தமது எதிர்ப்பு நடவடிக்கை நியாயமானதென்றும், உரிய கல்விகளைக் கற்று, தகுதியுடன் இருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பினை வழங்குமாறும், தமக்கான வேலைவாய்ப்பினை வழங்காத பட்சத்தில் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.