Header image alt text

சுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ்கிளை தோழர்கள், ஆதரவாளர்களும் நேற்று நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை தாயகத்தில் “தமிழினத்தின் ஜனநாயக தீர்வினை” அரசு அங்கீகரிக்க, சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை வழங்குமாறு வலியுறுத்தி, எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில், உறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்ல வலுசேர்க்கும் வகையில்” கோஷங்களையும் முன்வைத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த 35 வருடமாக “புளொட்” சுவிஸ் கிளையினர் பல இடையூறுகள், அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொடர்ச்சியாக, சுவிஸில் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு,

இராஜாங்க அமைச்சர்கள்

பாலித ரங்கே பண்டார: நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
Read more

வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நேர்முகத்தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார். Read more

சமுக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாக தெரிய வந்துள்ளது. Read more

திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டிகுளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளனவென, கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுக்குள் விறகு எடுப்பதற்காகச் சென்ற நபர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புலிகளின் சீருடை இரண்டு உட்பட 16 வெடிபொருட்கள், பெரிய பெட்ரி சாஜர், மல்டி பிளக், 4 அடி நீளமான கோட் வயர் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன என கோமரங்கடவெல பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ். காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து கூட்டமாக சென்ற மாடுகள் மோதியதில் 08 மாடுகள் உயிரிழந்துள்ளன.

புகையிரத குறுக்கு வீதியால் மாறும் போதே இந்த மாடுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தின் காரணமாக புகையிரதம் நிறுத்தப்பட்டு பிரதேசவாசிகளின் உதவியுடன் மாடுகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக புகையிரதம் சென்றுள்ளது. Read more

சமாதானத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் சிவில் சமுக அமைப்புகள் அரசாங்கத்துக்கு எவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்கு, இலங்கை ஒரு சிறந்த உதாரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுசபைத் தலைவர் மிரஸ்லேவ் லஜ்கக் இதனைத் தெரிவித்துள்ளார். சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதானத்தை நிலைபெற செய்தல் தொடர்பான மாநாடு, ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் கடந்த வாரம் நடைபெற்றிருந்தது. Read more

ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஆட்சியாளர்களின் செயலால் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும், அநீதிகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சேர்பியாவின் துணை பிரதமர் ஈவிசி டாசெக் ஒரு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சேர்பியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேர்பியாவின் முதலாவது துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரான ஈவிசி டாசெக் நாளைய தினம் இலங்கை வரவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் இவர் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார். Read more

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம் தொடர்பில், மெல்போர்ன் நீதிமன்றம் நாளை தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. நடேசலிங்கம், பிரியா என்ற குறித்த இலங்கை தம்பதியினருக்கு, அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளன. Read more