ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஆட்சியாளர்களின் செயலால் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும், அநீதிகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.