சேர்பியாவின் துணை பிரதமர் ஈவிசி டாசெக் ஒரு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சேர்பியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சேர்பியாவின் முதலாவது துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரான ஈவிசி டாசெக் நாளைய தினம் இலங்கை வரவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் இவர் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார். நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் பல ஒப்பந்தங்களையும் செய்துக்கொள்ள சேர்பிய பதில் பிரதமர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.