அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம் தொடர்பில், மெல்போர்ன் நீதிமன்றம் நாளை தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. நடேசலிங்கம், பிரியா என்ற குறித்த இலங்கை தம்பதியினருக்கு, அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில், அவர்களின் நாடு கடத்தலை எதிர்த்து, ஏதிலிகள் சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அவர்களின் நாடு கடத்தலைத் தவிர்க்க சாதகமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழ் ஏதிலிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.