குவைத் நாட்டிற்குள் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரை குவைத் நாட்டின் பார்வன்யா பகுதியில் வைத்தே பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் அடையாள அட்டையை பரீட்சித்த போது, சில தினங்களுக்கு முன்னர் அவர் குவைத் நாட்டில் தங்கியிருப்பதற்கான அனுமதிப்பத்திரம் நிறைவடைந்தமை பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், குறித்த நபர் ஒரு வருடத்திற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியமைக்கான பதிவுகள் உள்ளதை அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, அந்நாட்டு உள்துறை அமைச்சு சட்ட விரோதமாக நாட்டிற்குள் தங்கியிருந்தமைக்காக குறித்த நபருக்கு அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.