11 பேரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து கப்பம் பெற்று கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத்தை கைது செய்வதற்காக காவல்துறை, பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.

சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி என்றழைக்கப்படும் நேவி சம்பத்தை கைது செய்வதற்காக ஏற்கனவே கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. வெல்லம்பிட்டிய வென்னவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்களான 011 2 320 141/145 அல்லது 011 2 422 176 அழைத்து அறிவிக்குமாறு காவல்துறை கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.