Header image alt text

தொழிற்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் இலங்கை-சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை கடந்த 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அபிவிருத்தி திட்டம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சினால் விளக்கமளிக்கப்பட்டது. எப்படியிருப்பினும், தொழில்துறையினர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலர் குறித்த உடன்படிக்கை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டினர். Read more

வவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளும் இணைந்து ஏனைய கைதிகளுக்கு புரியும் அநீதிகள் தொடர்பாக, வவுனியா நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வருகை தந்த விளக்கமறியல் கைதி ஒருவர் இன்று பதில் நீதவானிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட விளக்கமறியலில் உள்ள கைதி ஒருவர், தனது கைகளை உயர்த்தி நீதவானிடம் சில விடயங்களை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். Read more

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷவை நிறுத்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தற்போது தேசிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டும் தமது ஆட்சியை நிலைநிறுத்த பயனற்ற அமைச்சரவை மாற்றத்தினை முன்னெடுப்பதால் எவ்வித மாற்றங்களும் ஏற்பட போவதில்லை என தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்கட்சியின் வேட்பாளர் தொடர்பில் தெளிவுப்படுத்தே போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், Read more

பிராந்திய ரீதியாக பாரிய அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவியை பெற்றுத் தருமாறும் ஜனாதிபதி, ஜப்பானிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் விசேட ஆலோசகர் ஹிரோடோ இஸ{மி உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். இதன் போதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

இரு நாடுகளின் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு தரப்பினருக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை – இந்திய அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை – இந்திய கடற்படையினக்கு இடையில் வருடாந்தம் இடம்பெறும் ‘சர்வதேச கடல் எல்லை மாநாடு’ காங்கேசன்துறையில் நேற்று இடம்பெற்றது. இந்திய கடற்படையில் 11 அதிகாரிகளும், இலங்கை கடற்படையின் 9 அதிகாரிகளும் இதில் பங்கேற்றுள்ளனர். Read more

கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான முயற்சிகளை செய்யவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். Read more

சுமார் 04 கோடி ரூபா பெறுமதியுடைய தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வை வரி அற்ற வர்த்தக நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 07 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயலத் கூறியுள்ளார்.

கிளிநொச்சி – பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். Read more

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் யுவதி ஒருவர் கடன் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் வேளை சிவன் கோயில் வீதி பேத்தாழையில் இடம்பெற்றுள்ளது. பஞ்சாட்சரவடிவேல் நோஜிதா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமது பெற்றோர்கள் அரேபிய நாட்டிற்கு தொழில் வாய்ப்பு தேடிச் சென்றுள்ளதினால் சகோதரர்களுடன் குறித்த யுவதி வாழ்ந்து வந்துள்ளார்.
Read more

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டனர்.

ஆனால் தற்போது எவரும் எதிர்பார்க்காத நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். Read more