இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவிகளில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது.சந்தேகநபர்களை நேற்று இரவு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். 2 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.