விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் தேரர் ஒருவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம் ஒன்றின்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், அவர்கள் இன்று கொழும்பு கோட்டை பிராதான நீதவான் லால் ரனசிங்க முன்னிலையில் பிரசன்னபடுத்தப்பட்ட போதே இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, 10 லட்சம் ரூபா ரொக்க பிணையிலும் 5 லட்சம் ரூபா சரீர பிணையிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.