முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு, இளங்கோபுரம் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் ஒருதொகுதி வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிற்கு தெரியப்படுத்தி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அதனை மீட்டு தகர்த்து அழிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.நேற்று குறித்த இடத்திற்கு சென்ற கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த வெடிபொருட்களை மீட்டு காட்டுப்பகுதியில் தகர்த்து அழித்துள்ளார்கள். இதன்போது 737 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள், கனரக துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆர்.பி.ஜி, துப்பாக்கி செலுத்திகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.