தொழிற்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் இலங்கை-சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை கடந்த 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அபிவிருத்தி திட்டம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சினால் விளக்கமளிக்கப்பட்டது. எப்படியிருப்பினும், தொழில்துறையினர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலர் குறித்த உடன்படிக்கை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டினர்.இது தவிர, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை சிங்கப்பூர் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்திருந்தது. அமைச்சரவையை தவறாக வழி நடத்தி இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சரியானது என ஏற்றுக்கொள்ள முடியாது என இன்றைய ஊடக சந்திப்பில் அபிவிருத்தி திட்டம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.