Header image alt text

லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த இலங்கைப் பெண்கள் 53 பேர், அந்நாட்டில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வீட்டுப் பணிப்பெண்களாக, பணியாற்ற லெபனான் சென்றிருந்த இவர்கள் முறையான விசா இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய பொது மன்னிப்பு காலத்தை உபயோகப்படுத்தி, லெபனானுக்காக இலங்கை தூதுவர் எடுத்த முயற்சியால் இவர்கள் மீண்டும் தாய் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் தேரர் ஒருவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம் ஒன்றின்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். Read more

இறுதி யுத்தத்தில் தமது உயிர்நீத்த முப்படையினரை கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு யாழ். பலாலி படைத்தலைமையகத்தில் உள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் ரனவிரு சேவா சங்க தலைவி அனேமா பொன்சேகா மற்றும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர். Read more

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான முதலீடுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக தெற்காசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இலங்கையும் இணைந்துள்ளது.

சிறுவர்களுக்கான தெற்காசிய பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினமும் நேற்றும் இடம்பெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, துஷிதா விஜேமான்ன மற்றும் ஆஸ{ மாரசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். Read more

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் நாடுகடத்தல் உத்தரவு பிற்போடப்பட்டுள்ளமையானது, அந்த குடும்பத்தை பதற்றத்தில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஏதிலி செயற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலிய சென்ற, 2013ம் ஆண்டுக்குப் பின்னர் மத்திய குயின்ஸ்லாந்தின் பிலோயிலா பகுதியில் குடியேறினர். Read more

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதிப்பகுதியில் தீடீர் தீபரவல் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடும் வரட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை மாற்றத்தினால் வனப்பகுதிகளில் தீப்பரவல்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக பெரும் காட்டுப்பகுதிளாக காணப்படும் இடங்களில் இந்த தீப்பரவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று புதுக்குடியிருப்பிற்கும், மன்னாகண்டல் சந்திக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் திடீரென தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. Read more

சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்கள் சில இன்றும் தாமதமாவதாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று காலை 04.15 மணிக்கு ஜித்தாவில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 282 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இன்று பகல் 01.25 மணி ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 04.50 மணிக்கு சென்னையில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 127 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய சுமார் 02 மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளன. Read more

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவிகளில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதுக்காக அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு 574 ஆவது படைப்பிரிவு முகாம், மக்களின் காணிகளில் அமைந்துள்ளது. இந்த காணிகளை விடுவிக்குமாறு பலதடவைகள் மக்கள் கோரியும் இந்த காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை. Read more

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு, இளங்கோபுரம் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் ஒருதொகுதி வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிற்கு தெரியப்படுத்தி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அதனை மீட்டு தகர்த்து அழிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள். Read more