Header image alt text

யாழ். சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் ஆவாக் குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்படதுடன், 4 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. Read more

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து இன்று முற்பகல் வாள்வெட்டுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர்மீது தாக்குதல் நடத்தினார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். Read more

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த, நல்லிதன் தமயந்தி (வயது- 26) என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். Read more

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து, இளம் தாய் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் வசிக்கும், 24 வயதான அழகரத்தினம் டிசாந்தினி எனும் இளம் குடும்பப் பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம், வீட்டின் வாசல் கதவருகே மீட்கப்பட்டுள்ளது. Read more

தமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து, சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர், காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, இன்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களில், வாடகைக்கு படகினை ஓட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக, கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், Read more

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு ஏற்ப 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, அத்தியாவசிய தேவை கருதி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 17 பேருக்கு உடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு ஏற்ப, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, பரீனாஸ் வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. காத்தான்குடிப் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவரின் இரு வாகனங்களே இவ்வாறு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளன. சம்பவத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. Read more

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6 மாவட்டங்களில் அதிகளவில் அபாய நிலைமை காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிச்சரிதவியல் பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். இதன் காரணமான மழை பெய்யும்போது மண்சரிவு தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனன அவர் கூறினார். Read more

“இந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பாக சமூகத்தின் அவதானம் மீளத் திரும்பியுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் சிரேஸ்ட ஊடகவியலாளர்ரும், த ஹிந்து நாளிதழின் இணை ஆசிரியருமான ரி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர் உடன்படிக்கையும்’ என்ற நூல் கொழும்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே அந்த உடன்படிக்கை தொடர்பான அவதானம் மீளத் திரும்பியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்றது. அந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளி உறுப்பினர் ஒருவரால் கைவிடப்பட்ட புகைப்பட அல்பம் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதென கூறப்படுகிறது. Read more