“இந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பாக சமூகத்தின் அவதானம் மீளத் திரும்பியுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் சிரேஸ்ட ஊடகவியலாளர்ரும், த ஹிந்து நாளிதழின் இணை ஆசிரியருமான ரி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர் உடன்படிக்கையும்’ என்ற நூல் கொழும்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே அந்த உடன்படிக்கை தொடர்பான அவதானம் மீளத் திரும்பியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. 1987 இல் கைச்சாத்திடப்பட்ட குறித்த உடன்படிக்கை ஊடாக இலங்கை அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு, மாகாண சபைகள் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அர்த்தமுள்ள அரசியல் தீர்வு குறித்து இன்னும் விவாதிக்கப்படுவதாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.