தமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து, சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர், காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, இன்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களில், வாடகைக்கு படகினை ஓட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக, கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைகள் மற்றும் மலேரியா தடுப்பு பரிசோதனையின் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், கடற்படையினர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணையின் பின்னர் 10 பேரும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.