யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து இன்று முற்பகல் வாள்வெட்டுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர்மீது தாக்குதல் நடத்தினார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.