யாழ். சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் ஆவாக் குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்படதுடன், 4 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டினை மேற்கொள்வதற்கு முயற்சித்தது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சுன்னாகம் பொலிஸார் குறித்த ஐவரையும் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், கைதுசெய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.