திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த, நல்லிதன் தமயந்தி (வயது- 26) என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கணவன் கத்திரிக்கோலால் குத்தி கொலைசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவரான ராசைய்யா ரேஹன் (வயது-34) என்பவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.