மட்டக்களப்பு, பரீனாஸ் வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. காத்தான்குடிப் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவரின் இரு வாகனங்களே இவ்வாறு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளன. சம்பவத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.