மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து, இளம் தாய் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் வசிக்கும், 24 வயதான அழகரத்தினம் டிசாந்தினி எனும் இளம் குடும்பப் பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம், வீட்டின் வாசல் கதவருகே மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்றபோது, பெண்ணின் 31 வயதான கணவனும், ஒரு வயது குழந்தையும் வீட்டில் இல்லை எனவும், அவரது அலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்