Header image alt text

குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக, ஹபரணைக்கான புதிய ரயில் பாதைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 84 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட இப்பாதை சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துதல், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளுக்கு உதவுதல், பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல நன்மைகளைக் கருத்திற்கொண்டு, இந்தப் பாதை அமைக்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. Read more

ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. தி.ஸ்ரீதரன் (சுகு) அவர்களுக்கும் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று

(04.05.2018) அன்று ஜெர்மன் Heilbronn இல் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை தவறு என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறங்குமாறு தாம் கூறியதாகவும் எனினும், ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்கியதாகவும்,

இது தவறான தீர்மானம்” எனவும் அவர் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமுர்த்தி மற்றும் தொழில் அமைச்சுகள் மக்களுக்காக பணியாற்றுவதை ஐக்கிய தேசியக் கட்சி உறுதிப்படுதத வேண்டுமெனவும், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அகதிகளாக 805 பேர் தங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 637பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதில் அதிகமானோர் பாகிஸ்தான் பிரஜைகள் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சமுர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக அண்மையில் தெரிவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினருக்கு மாதாந்தம் 13 கோடியே 50 லட்சம் ரூபா வழங்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கைக்கு இணங்க முதல்வர் ஒருவருக்கு இசைவுத் தொகையாக 30 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதுடன் பிரதி முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுமாலை வேளையில் உடையார்கட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வேகமாக வந்த வாகனமொன்று மோதியதில் படுகாயமடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Read more

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுக்காலை கூழாவடியில் தண்டவாளம் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த இருதயபுரத்தினை சேர்ந்த உதயன் ஜீவேந்திரன் என்னும் 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரமலை பகுதியில் நேற்று மாலை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் செங்கலடி, குமாரவேலியார் கிராமத்தை சேர்ந்த நா.சங்கரப்பிள்ளை என்ற 62 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். Read more

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எஸ். சத்தியசீலனும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவினால் இன்று இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. இதற்கமைய, வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமை வகித்த எஸ்.சத்தியசீலன், தற்போது மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.