முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமாலை வேளையில் உடையார்கட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வேகமாக வந்த வாகனமொன்று மோதியதில் படுகாயமடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் சுதந்திரபுரத்தை சேர்ந்த 80 வயதுடைய தோமையான் அந்தோனி என்பவரே உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொலிசார் இதுபற்றிய விசாரணைகளை நடத்துகின்றனர்.