நாடளாவிய ரீதியாக அண்மையில் தெரிவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினருக்கு மாதாந்தம் 13 கோடியே 50 லட்சம் ரூபா வழங்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கைக்கு இணங்க முதல்வர் ஒருவருக்கு இசைவுத் தொகையாக 30 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதுடன் பிரதி முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல, நகர சபை தலைவருக்கு 25 ஆயிரம் ரூபாவும், பிரதேச சபை தலைவருக்கு 25 ஆயிரம் ரூபாவும் இசைவுத் தொகையாக வழங்கப்படுகின்றது. இந்த இசைவுத் தொகைக்கு மேலாக போக்குவரத்து, தொலைபேசி, தபால் இசைவுத் தொகைகளும் வழங்கப்படுகின்றது.