2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை தவறு என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறங்குமாறு தாம் கூறியதாகவும் எனினும், ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்கியதாகவும்,

இது தவறான தீர்மானம்” எனவும் அவர் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமுர்த்தி மற்றும் தொழில் அமைச்சுகள் மக்களுக்காக பணியாற்றுவதை ஐக்கிய தேசியக் கட்சி உறுதிப்படுதத வேண்டுமெனவும், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.