யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 8ஆம் திகதியன்று சர்வதேச ரீதியில் செஞ்சிலுவை தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கிளையில் நடத்தப்படும் சர்வதேச செஞ்சிலுவை தினம் எதிர்வரும் 8ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ். அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணக் கிளையில் நடத்தப்படும் சர்வதேச செஞ்சிலுவை தினம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வலிகாமம் மேற்குப் பிரிவின் தலைவர் தி.உதயசூரியன் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் சிரமதான செயற்பாடுகள், செஞ்சிலுவை சங்க கொள்கை பரப்புரைகள், மரக்கன்று நடுகை மற்றும் அடிப்படை முதலுவதவி தொடர்பான கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.