குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக, ஹபரணைக்கான புதிய ரயில் பாதைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 84 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட இப்பாதை சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துதல், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளுக்கு உதவுதல், பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல நன்மைகளைக் கருத்திற்கொண்டு, இந்தப் பாதை அமைக்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் 2020ம் ஆண்டளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்ஹ இந்தப் பணிகளை நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.