Header image alt text

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடிவேம்பில் இன்று நடைபெற்றது.

தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி எனும் தொனிபொருளில் நடைபெற்ற இந்த மே தின கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார். ஜனாதிபதி தனது உரையின்போது, கடந்த 3 வருட காலப்பகுதிக்குள் எமது அரசாங்கம் இலங்கையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தெரிவித்தார். Read more

இலங்கையில் தம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான சீனாவின் தூதுவர் லூவோ சாஹோஹி இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீனாவின் ஜனாதிபதி க்சி ஜின்பின்னுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஆஃப்கானிஸ்தானில் இணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இணங்கிக் கொண்டனர். Read more

இரட்டை பிரஜா உரிமை வழங்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் மேலும் 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்படவுள்ளது. இவை எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படவிருப்பதாக குடிவரவு குடியல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல், இதுவரையில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. மாதாந்தம் இதற்காக சுமார் ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதாகவும் குடிவரவு, குடியல்வு கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காணிகள் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பகுதி மக்களை நேற்றையதினம் நேரில் சென்று பார்வைட்ட முதலமைச்சர், பின்னர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச இறப்பர் மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் வழிகாட்டல் மற்றும் அமைச்சரின் தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது. 36 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். Read more

தமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து, சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர், காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கடற்படையினரால் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பொலிஸாரின் விசாரணையின் பின் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டிருந்தனர். Read more

க.பொ.த உயர்தர பரீட்சை போது பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்வதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்த புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார். Read more

மின்னேரியா தேசிய பூங்காவில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக காட்டு யானைகளை பார்வையிட பூங்காவிற்கு சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகுந்து சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதன்போது, சுமார் 100 ஜீப் ரக வாகனங்கள் கிரிஓய ஊடாக பயணிக்க முடியாத நிலையில் நேற்று பூங்காவினுள்ளேயே சிக்கிக் கொண்டன. இதன் காரணமாக, சுற்றுலாப்பயணிகள் குறித்த பகுதியில் இருந்து நடந்தே வெளியேறியுள்ளனர்.