தமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து, சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர், காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் கடற்படையினரால் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பொலிஸாரின் விசாரணையின் பின் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களை மேமாதம் 19 திகதி வரையில் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.