மட்டக்களப்பு வாகரை கதிரவெளியில் 41 சிறுவர்களுடன் இயங்கி வருகின்ற திலகவதியார் சிறுவர் இல்லச் சிறார்களின் ஒருநாள் உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில் (06.05.2018) 16,000 ரூபாய் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. உதவி வழங்கும் நிகழ்வில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் செயற்குழு உறுப்பினர்களான வவுணதீவு பிரதேசசபை உப தவிசாளர் பொ.செல்லத்துரை, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா என்.ராகவன், கா.கமலநாதன்

மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் க.ஞானப்பிரகாசம், வாகரை மகாவித்தியாலய அதிபர் ச.அரசரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இல்லச் சிறார்களினால் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது.