வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நீங்கலாக அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 14 ஆம் திகதி 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமையைக் கண்டித்தே குறித்த அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது அவசர சிகிச்சை அனைத்து வைத்தியசாலைகளிலும் வழங்கப்படும் என இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.