வட மாகாண மிகை ஊழியர் அதிபர் சங்கம் இன்றையதினம் கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கல்வியமைச்சின் வளாகத்தில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தம்மை அதிபர் சேவையில் நிரந்தர நியமனத்தின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை இன்றைய தினம் அமைச்சரையோ அல்லது அமைச்சின் அதிகாரிகளையோ தம்மால் சந்திக்க முடியாவிட்டால் நாளை வரை தொடர்ந்து கல்வியமைச்சின் வளாகத்தில் தங்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.