இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரின் முறைப்பாட்டை அடுத்து, நியுயோர்க் நகர சட்டமா அதிபரும், அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கை ஆலோசகருமான எரிக் ஸ்னெய்டர்மென் பதவி விலகியுள்ளார்.

அமெரிக்க ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. தங்களிடம் அவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதுடன், உடல்ரீதியான வன்முறைகளிலும் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் தானியா செல்வரத்னம் என்ற இலங்கைப் பெண் உள்ளிட்ட நான்கு பேர் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அடுத்தே அவர் பதவி விலகியுள்ளார். தற்போது அவருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.