யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக் குழுவினரால் இருவர் மீது வாளால் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ். போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்றுமாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், அதே இடத்தைச் சேர்ந்த இருவர் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆவா குழுவின் தலைவர் என்ற அழைக்கப்படும் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 7பேர் 4 மோட்டார் சைக்கள்களில் சென்று இருவர்மீதும் சாரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவாக்குழுவினைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த கோபத்தின் நிமித்தமே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாள் வெட்டுக்கு இலக்காகிய மற்றைய நபர் கோவில் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர் என்றும் இந்த வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.