கனடா டொரன்டோவின் தொடர்கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்த்தரினால் மேலும் பல இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

கனடாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதன்நிமித்தம் அவர் நில சீரமைப்பாளராக பணியாற்றிய 100க்கும் அதிகமான காணிகள், மோப்ப நாய்கள் கொண்டு சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக கனடா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்கந்தராஜா நவரட்ணம், கிருஷ்ணகுமார் கணகரத்தினம் ஆகிய இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எண்மரை கொலைசெய்த அவர், தாம் நில சீரமைப்பாளராக வேலை செய்த காணிகளிலேயே புதைத்துவைத்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையிலான விசாரணைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த நபரும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், நியுயோர்க் சட்ட மா அதிபர் எரிக் சைனெடெர்மென், தங்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 4 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் அமெரிக்காவின் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.