மாங்குளம் கல்குவாரி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான மாற்றுத் திறனாளி நா. சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 30,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

வீடு வீடாக சென்று தேங்காய் வியாபாரம் செய்யும் அவர், தனது தொழிலை மேம்படுத்துவதற்காக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதியினை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் மத்திய குழு உறுப்பினர் வே. சிவபாலசுப்ரமணியம் (மணியண்ணன்) அவர்களும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் மாங்குளம் பிரதேசத்தின் செயற்பாட்டாளர் ஹரிச்சந்திரன் அவர்களும் வழங்கி வைத்தனர்.

நா.சந்திரசேகரன் கடந்தகால போர் சூழ்நிலை காரணமாக தனது இடது கால் மற்றும் வலது கால் பாதம் என்பன சிதைவடைந்த நிலையிலும், தனது வலது கை முறிவடைந்த நிலையிலும் தனது மனைவி மற்றும் மூன்று சிறு பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக வீடு வீடாகச் சென்று தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றார். தான் ஒரு இடத்தில் நிரந்தரமாக தேங்காய் கடையொன்றை நடாத்துவதற்கு உதவுமாறு அவர் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.