Header image alt text

வவுனியா இராசேந்திரன்குளம் விக்ஸ்காடு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை எக்கர் காணியினை இன்று காலை அப்பகுதியிலுள்ள வேறு ஒரு பிரிவினர் அபகரிக்க முற்பட்டபோது அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம் மேலும் தெரிவித்ததாவது, பாரதிபுரம், இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் காணியினை இன்று காலை 6மணியளவில் அப்பகுதியிலுள்ள வேற்று இனத்தவர்கள், சமயத்தலைவர் தலைமையில் சென்ற குழுவினர் அபகரிக்கும் நோக்குடன் டோசரை எடுத்து அப்பகுதியை சுத்தப்படுத்த முற்பட்டபோது Read more

ஜனாதிபதியின் மேலதிக மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஒருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி 10 நபர்களிடமிருந்து பணம் பெற்ற குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முக்கிய 5 நாடுகளில் இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகள் கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக காணப்படுவதாக தகவல் பதிவாகியுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, பிறேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகள் வெற்றிடமாகவுள்ளன. இலங்கையின் அரசியல் பொருளாதாரம் மற்றும் வெளிவிவகார பிரிவுகளின் செயற்பாடுகளுக்கு மிக முக்கிய நாடாக கருதப்படும். Read more

யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக் குழுவினரால் இருவர் மீது வாளால் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ். போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்றுமாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Read more

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் மனிதாபிமானமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் என்பன உலகளாவிய ரீதியாக இன்று, சங்க தினத்தைக் கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். Read more

கனடா டொரன்டோவின் தொடர்கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்த்தரினால் மேலும் பல இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

கனடாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதன்நிமித்தம் அவர் நில சீரமைப்பாளராக பணியாற்றிய 100க்கும் அதிகமான காணிகள், மோப்ப நாய்கள் கொண்டு சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக கனடா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்கந்தராஜா நவரட்ணம், கிருஷ்ணகுமார் கணகரத்தினம் ஆகிய இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எண்மரை கொலைசெய்த அவர், தாம் நில சீரமைப்பாளராக வேலை செய்த காணிகளிலேயே புதைத்துவைத்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையிலான விசாரணைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த நபரும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், நியுயோர்க் சட்ட மா அதிபர் எரிக் சைனெடெர்மென், தங்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 4 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் அமெரிக்காவின் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.