சய்டம் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்வதானால் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமலும், சொத்துக்களை சேதப்படுத்தாமலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.