கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலைய இராணுவத்தின் தீயணைப்பு வீரர்கள் தலையிட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ காரணமாக விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவை அண்டிய பகுதிகளில் அதிக புகை பரவியுள்ளது. மேலும் தீ பரவலால் விமானப் போக்குவரத்துக்கோ விமானப் பயணிகளுக்கோ எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லையென விமானநிலையம் தெரிவித்துள்ளது.அத்துடன் தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.