தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவரை பணி நீக்கம் செய்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இப்பலோகம பகுதியில் உள்ள பெலும்கல எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அழித்தமை தொடர்பில் இவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அநுராதபுர மாவட்டத்தின் முகாமையாளரும் தொழிநுட்ப அதிகாரியுமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.