லண்டனில் இருந்து வெளியாகும் ´தி கார்டியன்´ (The Guardian) இணையத்தளம் உலகின் சிறந்த 18 புகையிரத பயணங்கள் பட்டியலிட்டுள்ளது.

குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ள மிகச் சிறந்த 18 புகையிரத சேவைகள் பட்டியலில் ஆசியா கண்டத்தில் இலங்கையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி புகையிரத சேவையும் இடம்பெற்றுள்ளது. புகையிரத பயணத்தின் போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் என பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்தேவி புகையிரதம் இலங்கையின் வடக்கு மற்றும் தென் பகுதியை கலை, பண்பாடு, வர்த்தகம் என பலதரப்பட்ட வகைகளில் ஒன்றிணைக்கின்றது. இப்பட்டியலில் இந்தியாவின் நீலகிரி மலை புகையிரதமும் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.