கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன்கட்டுப் பகுதியில் புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிராம விஸ்தரிப்பு திட்டக்காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவுப்பொலிஸார் இன்று குறித்த இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.நீதிமன்ற பதிவாளர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.