கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தம்மை உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து எதிர்ப்பில் ஈடுபட்ட மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

அதன் சிரேஷ்ட அதிகாரியொருவருக்கு குறித்த மனுவை கையளித்த பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்ட சைட்டம் மாணவர்கள் பின்னர் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை அடைந்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் காலி முகத்திடலுக்கான நுழைவு வீதியை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் மூட காவற்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.