மலேசியாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 92 வயதுடைய முன்னாள் பிரமதர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று 9 ஆம் திகதி இடம்பெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்நிலையில், முன்னாள் பிரமதர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி 115 ஆசனங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.