விசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கான, நீதித்துறை திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, மேலதிக 67 வாக்குகளால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதையடுத்து, இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. நேற்றைய நாள் முழுவதும் இந்த சட்டமூலம் தொடர்பில் விவாதம் இடம்பெற்று மாலை 6.30 அளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. ஒன்றிணைந்த எதிர்கட்சியும், அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.