நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர்மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து கடந்த 07ம் தகிதி இளைஞர்கள் இருவர்மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 23வயதுடைய அப்புத்துரை கிரிசன் என்ற இளைஞனின் கழுத்தில் வெட்டுப்பட்டும் 23வயதுடைய கிரிகேசன் என்ற இளைஞனின் காலில் படுகாயமடைந்த நிலையிலும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். Read more