Header image alt text

தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இதன்போது உடனிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு 5 வயது மகள் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுகந்தன் துசாந்தினி என்ற சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தந்தை, தனது தொழிலுக்குச் செல்கின்ற போது, தனது மகளையும் முள்பள்ளிக்கு ஏற்றிச்சென்று இறக்கி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். Read more

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், இன்று இடம்பெறவுள்ள கலந்தரையாடலை அடுத்து, பஸ் கட்டணத்தை அதிகரிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படுமென, கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்த நபர்மீது கார் ஒன்றில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். சிறிமாபுர பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஹேந்தவித்தாரன செலின் குமார எனப்படும் தெல் குமார என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Read more

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் யானைத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாகனேரி சுற்றுலா விடுதி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய கால்நடை வளர்ப்பாளரான 3 பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Read more