அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், இன்று இடம்பெறவுள்ள கலந்தரையாடலை அடுத்து, பஸ் கட்டணத்தை அதிகரிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படுமென, கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.