யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன்  மற்றும் இராஜயாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்   ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்துக்கென யாழ் பழைய பூங்கா வீதியில்புதிதாக அமைக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட திடல் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை (12.05.18)மாலை இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பா.உ திரு.த.சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் , யாழ் மாநகர முதல்வர் திரு இ.ஆர்னோல்ட் ஆகியோரும் மைதான திறப்புவழாவில் கலந்து கொண்டனர்.
குறித்த இக் கூடைப்பந்தாட்ட மைதானம் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட வீர்களுக்கு மன்னேற்றத்தக்கு துணையாக அமைந்துள்ளது.
மேலும் இந் நிகழ்வில் கூடைப்பந்தாட்ட போட்டிகளும் நடைபெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன.