Header image alt text

ஒன்பதாவது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வு எழுச்சியுடன் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள் ளதுடன் அன்றைய தினம் துக்கதினமாக அனுஷ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலும் வடக்கு மாகாண சபை, பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்பில் பேரெழிச்சியுடன் நாளை காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. Read more

வவுனியாவில் விளக்கமறியலில் உள்ள கைதி மீது நேற்றுக் காலை சிறைக்காவலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த சிறைக் கைதி வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ள னர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், Read more

தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள் ளைச் சம்பவம் ஒன்று கடந்த திங்கட்கிழமை 14.05.18 இடம்பெற் றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளை யர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தி யுள்ளனர்.

தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 கைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட தாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாக வும் தெரிவிக்கப்படுகிறது.

இரணைதீவில் மக்கள் தங்களின் பூர்வீ கமான சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவ தற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவி ருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் அறிவித் துள்ளார் Read more